எம் இன சாவுக்கு நீதி

02-1433258847-karunanidhi

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நானும் எனது குடும்பத்தினரும் இன்று 92 வயது காணும் கலைஞரின் கண்மூடி தனமான ஆதரவாளர்களாக தான் இருந்தோம்.

அன்றைய காலகட்டங்களில் கலைஞரை பழித்தவன் எல்லாம் என் எதிரிகள் என்ற எண்ணத்திலேயே மனம் மிதந்தது.

கலைஞர் நள்ளிரவில் கைது என்ற செய்தி கேட்டு அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தோம். அன்றைய தேதியில் ஜெயலலிதா என் கையில் சிக்கி இருந்தால் கொலையே செய்திருப்பேன்.
எனது பெரியப்பா மலேயாவில் இருந்து தொலைபேசியில் அழைத்து மிகுந்த வேதனைப்பட்டதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவையும் எம்ஜிஆர் ஐயும் வசை பாடினோம்.

என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் உன்னத தலைவன் என்ற எண்ணத்தில் திளைத்தேன்.

தமிழினத்திற்கு இவர் கிடைத்தது ஒரு வரம் என்றிருந்தேன்.

எனது ஊரில் அவர் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவரது குரல் கேட்க சென்றுவிடுவேன். அவர் குரல் என்னை ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்க வைக்கும்.

மயிலை மாங்கொல்லை அருகில் தங்கி இருக்கையில் அவரது ஒவ்வொரு பொதுக்கூட்டமும், என் தங்கும் அறைக்கு அருகிலேயே நடக்கும். என் அறையில் இருந்தே மேடை அமைப்பதில் இருந்து, அவர் பேசி முடித்து கிளம்பும் வரை பார்த்து பூரிப்படைவேன், அதனை என் குடும்பத்தாரிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வேன். “கலைஞரை மிக அருகில் இருந்து பார்த்தேன்” என்று.

கலைஞரின் தலைமையில் தான் திருமணம் கூட செய்து கொள்ள வேண்டும் என்று கூட எனக்குள் கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டேன்.

அப்படி அவரை நான் உச்சத்தில் வைத்து மதித்து வந்தேன்.

அப்படிப்பட்ட அவரது நிஜ உருவம் பற்றி நான் தெரிந்துகொள்ள ஒன்றரை லட்சம் சொந்தங்களை கலைஞர் வருணித்த தூவானத்தால் இழக்க நேரிட்டது.

அந்த இழப்பீட்டிற்கு நிவாரணமாக தனது கட்சியினருக்காக மந்திரிப்பதவி வாங்க சக்கர நாற்காலியில் டெல்லி வரை பறந்தார். ஆனால் எம் சொந்தங்களின் இழப்பை மத்திய அரசுக்கு சொல்ல கடிதம் மட்டுமே எழுதினார், எழுதிய கடிதம் டெல்லிவரை பறந்ததா என தெரியவில்லை.

அதே மயிலை மாங்கொல்லை அறையில் நான் 2009 – 2010களில் தங்கி இருக்கும் பட்சத்தில் அவர் பேசிய மேடையில் செருப்பை வீசியிருப்பேன். ஆம் அந்த காலக்கட்டத்தில் தான் இந்த நரியில் சுயநலத்தை எண்ணி வெருப்படைந்திருந்தேன்.
4c8467668d2b7
இவரை நம்பிய எமது பெண்கள் சிங்கள வெறியனால், கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக சிதைக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டனர், பிஞ்சுகள், சிங்கள கொடியவனின் கத்திகள் மற்றும் துப்பாகிகள் மூலமாக இறந்து உலகை எட்டிப்பார்த்தது,
srilankan tamils genocide
ஆண்கள் துப்பாக்கி குண்டுகளால் சிங்கள நாயால் சுட்டு வீழ்த்தப்பட்டான், இதற்கெல்லாம் ஒரே வார்த்தையில் “சகோதர யுத்தத்தால் வீழ்த்தப்பட்டனர்” என்றார்.

மத்திய அரசு ஆட்சியில் அவருக்கு சகோதரனாய் இருந்த ” காங்கிரசு சகோதரனின்” ஆதரவு யுத்தத்தால் கொல்லப்பட்டனர் என்பதை தான் சொன்னார் என்பது பெரும்பான்மையானோருக்கு புரிந்திருக்காது.

ஈழத்தில் இருந்து ஒரு கிழவி சுயநினைவு இல்லாமல் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபொழுது சற்றும் மனிதாபிமாணம் இல்லாமல் யாரையோ குளிர்விக்க விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பினார்.

உலகம் வியந்த ஒருமணிநேர உண்ணா விரத நாடகத்தை செவ்வனே நிகழ்த்திவிட்டு, போர் முடிவுக்கு வந்தது என்ற மாயத்தை உருவாக்கினார்.

Genocide in srilanka
போர் நிறுத்தம் அறிவித்த பின்பு தான் பெரும் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று நாம் பதரியதர்க்கு மழை நின்றும் தூவானம் நிற்கவில்லை என்று கவிதை நடையில் பேசி தனது கவி திறனை நிரூபித்தார்.

இன்னும் எத்தனை எத்தனை சித்து விளையாட்டுகள், உங்கள் சித்து விளையாட்டிற்கு உங்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்த தமிழினமா காவு வாங்கப்பட வேண்டும்?

இதற்கும் மேல் காவு கொடுக்க எங்களிடம் சக்தி இல்லை.

உங்களுக்கு சில வேண்டுகோளை வைக்கிறேன், நீங்க இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும், உங்கள் குடும்பத்தில் நடக்கும் சகோதர யுத்தத்தை கண்டுகளிக்க வேண்டும், நீங்கள் முதுமை நோயாலும், படுக்கையில் வேதனையுற்று சாக வேண்டும்.

அதுவே எம் இன சாவுக்கு நீதி.

வாழ்க உங்கள் திராவிட பாசமும், தமிழ் விரோதமும்.

Leave a comment